search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி உயர்வு"

    • ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.

    சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.
    • களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வயர்மேன் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. சார்பில் இணைப்பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பதவி கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளதை காரணம் காட்டி வயர்மேன் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது. காலதாமதம் இன்றி வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு ஆகிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் வயர்மேன் பற்றாக்குறையால் மின் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மின் வாரியத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் அவினாசி, திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட கோட்டங்களில் 75-க்கும் அதிகமான இடங்களில் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்களை) மின்பாதை ஆய்வாளர் பராமரித்து வந்தனர். மின்பாதை ஆய்வாளருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு உதவியாளர் (ஹெல்பர்) இருந்தனர். இதனால் மின்தடை ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்து தடையில்லா மின்சாரம் கிடைத்தது.

    இந்தநிலையில் பதவி உயர்வு பெற்–றும் விருப்ப மாறுதலிலும், பணி ஓய்வு பெற்றும் ஏராளமான மின்பாதை ஆய்வாளர்கள் சென்றுவிட்டதால் சில ஆண்டுகளாக இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மின்பாதை ஆய்வாளர் பணியாற்றக்கூடிய வட்டத்தில் தற்போது போதுமான மின்பாதை ஆய்வாளர் இ்ல்லை. உதவியாளருக்கு அடுத்த நிலையில உள்ளவர்கள் பணியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிலும் போதுமானவர்கள் இல்லாததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    திருப்–பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளன. புதிய மின்கம்பங்களுக்காக, மின்சார வாரியத்தில் பணம் செலுத்தி பல ஆண்டுகளாகியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடை  உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. மின்விபத்துகள் ஏற்படும் போது குறித்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் மின் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.

    எனவே உடனடியாக திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திலுள்ள வயர்மேன்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்கவும், காலதாமதம் இன்றி திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளரை நியமிக்கவும் உரிய தீர்வு காண ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
    • இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது. நாமக்கல் எஸ்.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராஜா நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாநகர சி.பி.சி.ஐ.டி. ஓ.சி.யு. பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம் சென்னை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற்றுள்ளார். ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், என்.ஐ.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோரும் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.

    • துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.
    • இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் சார் பதிவாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 58 பேருக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, சேலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் குமார், கோபால், சின்னபையன், தனசேகரன், வெங்கடேசன், நாமக்கல் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் பரமசிவன், ரவிச்சந்திரன், நாகராஜன் உள்பட 58 கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதிவாளராக பரமசிவன், கிருஷ்ணகிரி பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளராக குமார், திருச்செங்கோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளராக ராம்குமார், தர்மபுரி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளராக மதியழகன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளராக நாகராஜன் உள்பட 58 கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

    • கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன.
    • பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைபேசி வழங்கப்பட்டது. தற்போது இந்த கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன. ஆனாலும் பழுதடைந்த கைபேசிகளை வைத்து பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

    இதனை கண்டித்து வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவல ர்களிடம் கைபேசியை ஒப்படைப்பு என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த அங்கன்வாடி உயர்வு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் சென்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

    எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவினம் பயணப்படி ஆகியவைகளை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி வரன்முறை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள காத்திருப்பு போராட்ட த்தில் திருவாரூர் மாவ ட்டத்திலிருந்து ஏராளமா னவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இறுதியில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.

    • தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தேர்வு எழுத வராதவர்களின் விவரம் மாலையில் தெரியவரும்.

    இந்த தேர்வை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வந்தது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்,  இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகும் என உறுதி அளித்திருந்தார்.

    மேலும் இதற்கு முன்னரே, வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் இதுபற்றி ஆராய மத்திய அமைச்சர்கள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில்  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைபடி இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறி நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
    ×